fredag 22. mai 2009

தலைமையை பாதுகாப்பதில் தவறிழைத்தனர்

தலைமையை பாதுகாப்பதில் தவறிழைத்தனர்


வன்னியில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக பலகேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கின்றன. மக்களின் நிலைதொடர்பாகவும், விடுதலைப்புலிப்போராளிகள் தொடர்பாகவும் விடைபெறாமல் பல கேள்விகள் இருக்கின்றன.விடுதலைப்புலிகளின் எவ்வாறு சர்வதேச சதிவலையில் வீழ்ந்தது என்ற கேள்வி பலமாகவே எழுப்பப்படுகின்றது. இவற்றிற்கான விடையை பலர் பலமாதிரி கூறிக் கொள்ள முடிகின்றவேளையில் விடைகொடுக்கப்படாமல் பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. புலிகளின் மறைவை இட்டு குது}கலிக்கும் ஒரு கூட்டம் இருக்கின்ற வேளையில் நந்திக்கரையில் என்ன நடந்தது என்பது பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் வரலாற்றுக் கடமையில் ஈடுபட்டிருப்பவர்கள் புலியெதிர்ப்பாளர்களோ அல்லது புலிஆதரவாளர்களோ அல்ல. விடுதலைப்போராட்டத்தின் நலன்கருதி புலிகளை அம்பலப்படுத்தியவர்களே இதற்கான பதிலை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த தேடலின் நோக்கம் வன்மம் கொண்டல்ல மக்கள் நலனின் அடிப்படையில் அமைந்தது.
முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் தொகை என்ன? காயப்பட்டவர்களின் தொலை என்ன என்பது பற்றியெல்லாம் அக்கறைப்படால் அரசும் அதன் பங்காளிகளும் இருக்கின்றனர். இவற்றில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. காயப்பட்டவர்கள்> கொலைசெய்யப்பட்டவர்களின் தொகையை அறிய முடியாது மூடி மறைக்கின்றது இனவாத அரசும்> அதன் பங்காளிகளும். இனஐக்கியத்தைப் பற்றிப் பேசுபவர்கள் முதலில் காயப்பட்ட> கொல்லப்பட்ட மக்களின் பால் முதலில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதனை விடுத்து தமது வெற்றியை கொண்டாடுவதன் மூலம் தனது இனவெறியை மேலும் தோலுரித்துக் காட்டியுள்ளது.
கடந்த பலமாதங்களாகவே குண்டுவீச்சுக் காரணமாக பலர் அங்கவீனர்களாகவும்,கடும் சுகவீனமுற்றும் மாத்தளன் வைத்தியசாலையில் இருந்த மக்கள் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டபின்னர் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருக்கின்றது. எஞ்சிய நோயாளிகள் என்னஆனார்கள் என்பது பற்றிய கவலை கூட இனவெறி அரசுக்கு இருக்கவில்லை. தமது இராணுவ வெற்றிபற்றிய சிந்தனைதான் மேலோங்கியிருந்தது.
கைப்பற்றப் பட்ட பின்னர்; ஊடகங்களை உடனடியாக அனுமதிக்கவில்லை. இந்தக் காலத்தில் கொல்லப்பட்ட மக்களை அப்புறப்படுத்துவதும்> புலித்தலைவர்களின் பிணங்களைத் தேடித் தான் இவர்களின் கவனம் இருந்திருக்கின்றது. மனித பிணங்ளை வைத்து அரசியல் பேசும் கயவர்கள் வெட்கம் இல்லாது இனவெறி அரசிற்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றார்கள். இனவெறி அரசிற்கு மாற்றான சுயாதீனமான அரசியல் பாதையை தெரிவு செய்ய முடியாது இருக்கும் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தின் எதிர்ப்புரட்சிகர சக்திகள். இந்த எதிர்ப்புரட்சிகர சக்திகளின் சர்வதேச மக்களிடம் பாசீசத்தை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யாது பாசீசத்தின் காலடியில் இருந்து கொண்டு தீர்வு வரும் என்று மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
வன்னி நிலப்பரப்பில் பொதுமக்கள் அகப்பட்டிருந்த வேளையில் புலிகளின் தந்திரோபாயத்திற்கு உட்பட்டுத் தான் இருந்துதான் அந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது என்று கணிக்கப்பட்டது. அதாவது புலிகளின் தந்திரோபாயம் என்பது அழிவில் இருந்து உலகத்தின் கவனத்தை கொள்ளவைப்பதும் அதன் மூலம் சர்வதேச தலையீட்டை எற்படுத்துவதன் மூலம் ஒரு பேரத்திற்கு உட்படுத்துவது. அதாவது தமது போராளிகள் போராடிக் கொண்டிந்ததும், அவர்கள் மக்கள் மத்தியில் இருந்து வாழ்வதன் மூலம் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதும் மறுபக்கத்தில் அவலத்தைக் காட்டி சரணடைவின் மூலம் பேரம் பேசுவதுமாகும். இதற்கு முதல் அடிப்படையானதே தலைமையை பாதுகாப்பது என்பதில் இருந்துதான் தொடங்கப்பட்டது என்று எதிர்பார்க்கப்பட்டது. தலைமையை பாதுகாப்பதில் ஒரு அமைப்பு கவனம் செலுத்தியிருக்கும் என்று கணிப்பிடுதில் எவ்வகையிலும் தவறாகாது. இதன் நிமிர்த்தமே தலைமை பாதுகாப்பாக இருக்கின்றது என்று எப்போதும் கருதப்பட்டது.
எவ்வாறு தலைமையை பாதுகாப்பதில் தவறிழைத்தனர் என்பதை அறிய வேண்டியிருக்கின்றது. உலகத்திலேயே மனிதவளம் கொண்டு பாதுகாக்கப்படும் ஒரு தலைவராகவே பிரபா இருந்துள்ளார்.

  • இதில் பாதுகாப்பில் எவ்வாறு தவறிழைக்கப்பட்டிருக்கின்றது. வன்னியில் மக்களுடன் இருப்பதாக பலதடவைகள் உறுதிப்படுத்தப்பட்டது இதனை மக்களும் தளபதிகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்போராட்டத் தலைமை செய்மதி கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்திருக்கின்றார்கள் இதன் மூலம் தலைமையின் நகர்வுகள் தெரிந்திருக்கும்இப்பொழுது (உண்மையாயின்) ஆதாரமாகக் காட்டப்படும் பிரபாவின் கையடக்கத் தொலைபேசி
    இவைகள் எல்லாம் ஒரு தலைமையைப் பாதுகாப்பதில் விடப்பட்ட நடைமுறைத் தவறுகளாகும். தலைமையை பாதுகாப்பதில் கவலையீனமான இருந்திருக்கின்றார்கள் என்றே இந்தப் படுகொலை நிகழ்வு காட்டி நிற்கின்றது. தலைமையை பாதுகாப்பதில் அசாதாரணமாக இருந்திருப்பதை ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்வாறு அசாதாரணமாக விடுதலைப்புலிகள் இருந்திருப்பதை நம்பவே முடியவில்லை.

இருந்த போதும் ஒரு சக்தி தலைமையின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுத்த நிலையில் இருந்திருப்பார்கள் ஆயின் அந்த வெளிச் சக்தி யார்?
இந்திய பிராந்திய வல்லரசு பிரபாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க துளிகூட சந்தர்ப்பம் இல்லை. சிறிலங்கா அரசும் பிரபாவிற்கு உத்தரவாதம் கொடுக்கப் போவதில்லை. புலிகளின் சரணடைவு என்பது ஒரு குறிப்பிட்ட பேரத்திற்கு உட்பட்டுத் தான் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் “நாற்காலி ஆசைக்காக வெளிநாட்டவரின் தயவை எதிர்நோக்கிய காலம் முடிந்து விட்டது. தேசத்தின் கவுரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராகுமாறு நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தங்கள் உயிரை அர்ப்பணித்திருக்கும் பத்தாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தின் மீது நின்று கொண்டுஇ “அந்நியக் கடவுளர்களின்” முன் நாம் தலைவணங்க மாட்டோம்.” தோழர் பிரசாண்டா"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் இணக்கம்: செ.பத்மநாதன்"இவற்றில் எது தேசியவாதக் கருத்து இருக்கின்றது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கிய நிகழ்வு என்பது சிக்கலாக சிலந்திவடிவத்தின் அமைந்து கொண்ட நபர்களினால் செய்து முடிக்கப்பட்டது.

  • புலிகள் அன்னியத் தலையீட்டை எதிர்பார்த்தது என்னமோ உண்மை.மக்களின் அழிவில் இருந்து உருவாக்கப்படும் அசாதாரான நிலையில் வெளியில் இருந்து தலையீடு இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர். இவர்களுக்கு முழு நம்பிக்கையை வளர்த்து விட்டது எந்த அரசியல். பிரபாவிற்கு அன்னிய தலையீடு பற்றி உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது இதுயாரால்?தலைமை உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.ஏதோஒரு வகையில் பிரபா தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்அப்படி நிராயுதபாணியாக்கப்பட்டிருந்தாலும் ஏன் பிரபா சைனைட் உட்கொள்ளவில்லை. அந்த வில்லை எங்கே?
    கே.பி பற்றிய சந்தேகம் பரவலாக உருவாக்கப்பட்டிருக்கின்றது இந்த சந்தேகம் கூட 99 வீதம் நம்பக் கூடியதே. அவர் விடுதலைப்போராளியல்ல அவர் ஒரு வியாபாரிசொத்தை தன்வசம் வைத்திருப்பவர்சர்தேசம் எங்கும் தேடப்படுபவர்

இந்த பலவீனங்கள் காட்டிக்கொடுப்பிற்கு பலமான காரணங்களாக அமைவதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இந்த மோசம் என்பது விடுதலைப்புலிகளின் அமைப்பினுள் இருந்து உருவாக்கப்பட்ட சதிகாரர்களால் தான் செய்து முடிக்கப்பட்டது. இது பல்லுப்பிடுங்கப்பட்ட ஒட்டுக் குழுவினரால் கனவிலும் நினைத்திருக்க முடியாத செயலாகும்.

நாம் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியில் இருந்து எவ்வாறு எழுவது என்பது பற்றி பிரச்சனைதான் இப்போதுள்ளது.
இன்று விடுதலைப்புலிகளின் விசுவாசிகள் தமது தலைவர் இருப்பதான நம்பிக் கொள்ளலாம் அது அவர்களின் ஆன்ம திருப்தி சம்பந்தப்பட்டதாகும். ஆனால் மக்களின் விடுதலை என்பது போராடும் வல்லமை சம்பந்தப்பட்டதாகும். இன்று பிரபா தமிழ் மக்கள் வரலாற்றில் தேசியக் குறியீடாக உருவாக்கப்பட்டிருக்கின்றார். இவை தவிர்க்க முடியாத நிகழ்வாகின்றது. இன்று விடுதலைப்புலிகள் தமது உள்வீட்டில் உள்ள சதிகாரர்களை கண்டறிய வேண்டும். இதில் இருந்து புதிய உத்வேகத்தில் தமது கடந்தகால வரலாற்றை மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும். தமது சாதக பாதக நிகழ்வுகளை விமர்சனம் செய்து முன்னேற வேண்டியிருக்கின்றது. இதில் இவர்கள் கொண்டுள்ள சவால்கள்

உள்வீட்டுச் சதிகாரர்கள்

புதிய புலம்பெயர் அதிகார வர்க்கம்

பாமர தேசபக்தர்கள்

சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்கின்ற நட்பு சக்திகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பிரச்சனை இதே போல அவர்கள் எவ்வகை அரசியல் பாதையை தெரிவு செய்யப்போகின்றார்கள் என்பதில் விடுதலைப்புலிகளின் எதிர்காலம் அடங்கியிருக்கின்றது.

Ingen kommentarer:

Legg inn en kommentar